சுரேஷ் ரெய்னா அதிரடியில் கொல்கொத்தா அணியை வெற்றிகொண்டது குஜராத் அணி!


10 வது IPL தொடரின்  நேற்றைய(21) போட்டியில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் மற்றும் காம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிட்டன.

முதலில் ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன், ராபின் உத்தப்பா அதிரடி ஆட்டம் மிகப்பெரியளவில் உதவியது.

ஆரம்ப வீரராக வந்த சுனில் நரைன், அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யாவின் சாதனையொன்றை இன்று தகர்த்துள்ளார்.

IPL போட்டிகளில் அத்தனையும் பவுண்டரிகள் மூலமாக பெற்ற அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனை, இதுவரை சனத் வசமிருந்தது.மும்பாய் இந்தியன்ஸ் அணிக்காக விளையாயிடும் போது டெக்கான் சார்ஜஸ் அணிக்கெதிரான 2008 இல் இடம்பெற்ற IPL போட்டியில் பெற்ற 36 ஓட்டங்களையும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் மூலமாக பெற்றிருந்தார்.

அந்த சாதனையை,இன்றைய போட்டியில் 17 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்த சுனில் நரைன் முறியடித்துள்ளார்.இவரது துடுப்பாட்டத்தில் 9 பவுன்டரிகளும் , ஒரு சிக்சரும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரொபின் உத்தப்பாவும் அதிரடியாக 72 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு 188 எனும் இலக்குடன் ஆடிய குஜராத் லயன்ஸ் அணிக்கு பின்ச் 31 ஓட்டங்கள், மக்கலம் 33 ஓட்டங்களையும் அணித்தலைவர் ரெய்னா அதிரடியாக விளையாடி 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க குஜராத் லயன்ஸ் அணி ,4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குஜராத் லயன்ஸ் அணிக்கு 6 வது போட்டியில் 2 வது வெற்றியாகவும், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 6 வது போட்டியில் கிடைத்த 2 வது தோல்வியும் இதுவாகும்.

இன்று(22) 4 மணிக்கு இடம்பெறும் போட்டியில் பூனே மற்றும் ஹைதராபாத் அணிகளும், 8 மணிக்கு இடம்பெறும் போட்டியில் மும்பாய் மற்றும் டெல்லி அணிகளும் போட்டியிடவுள்ளன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment