யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று(28) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேகநபர்கள் இருவரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்றைய தினம் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களான 10 சந்தேக நபரான யாழ் வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்த பியவர்த்தன ராஜ்குமார்( வயது-27) மற்றும் 12 ஆவது சந்தேக நபரான 65 வயது மதிக்கத்தக்க புங்குடுதீவு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் ரவீந்திரன் ஆகியோராவர்.
மேலும் ஏனைய 10 சந்தேக நபர்கள் தற்போது இப்படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment