மும்பாய் அணியின் தொடர்ச்சியான வெற்றி பயணத்துக்கு முடிவு கட்டியது பூனே, சொந்த மண்ணில் வீழ்ந்தது மும்பாய்!


10 வது IPL தொடரின் நேற்றைய(24) போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் மற்றும் ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் போட்டியிட்டன .

மும்பாய் வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பாய் இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள் பெற்றது.

ரஹானே 38, திருப்பதி 45 , மனோஜ் திவாரி 22 ,டோனி 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் கரண் சர்மா, பூம்ரா ஆகியோர் இவ்விரு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு ஆடிய மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு இறுதி 4 ஓவர்களில் 39 ஓட்டங்கள் மட்டுமே தேவையான நிலையில் ,ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சு அந்த அணிக்கு 3 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியை தேடிக்கொடுத்தது.

இறுதி 2 ஓவர்களில் 24 ஓட்டங்கள் தேவைப்பட, 19 வது ஓவரை வீசிய பென் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார், இதனால் இறுதி ஓவரில் மும்பாய் அணியின் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஜெயதேவ் உனட்கட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்டிக் பாண்டியா ஆட்டம் இழந்தார்.4 வது பந்தில் அரைச்சதமடித்த ரோஹித் சர்மாவும் ஆட்டம் இழக்க இறுதி 2 பந்துகளில் 11ஓட்டங்கள் தேவைப்பட்ட்து. ஹர்பஜன் இறுதி பந்தை சிக்சருக்கு விரட்டினாலும் பூனே அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தொடர்ச்சியான 6 போட்டிகளில் வெற்றிபெற்ற மும்பாய் இந்தியன்ஸ் அணி இன்று சொந்த மண்ணிலேயே தோற்றுப்போனது, அதுவும் ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய இரு போட்டிகளிலும் மட்டுமே மும்பாய் இதுவரை தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகன் விருதை பென் ஸ்டோக்ஸ் பெற்றுக்கொண்டார்.

இன்றைய போட்டி ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் டோனிக்கு 150 வது IPL போட்டியாகும். அதேபோன்று மும்பாய் இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கும் இது 150 வது IPL ஆட்டமாகும்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா 154 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக்(145), கோஹ்லி(143), ரொபின் உத்தப்பா(142), யூசுப் பதான்(141) ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment