ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணி, டோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க அற்புதமான வெற்றியை இறுதி பந்தில் பெற்றது.
10 வது IPL தொடரின் நேற்று(22) இடம்பெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான சன் ரைசேர்ஸ் ஹைதாராபாத் அணியும்,ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியும் போட்டியிட்டன.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசேர்ஸ் ஹைதாராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 176 ஓட்டங்கள் பெற்றது.
பதிலுக்கு 177 எனும் இலக்குடன் களம் புகுந்த ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கு, அதிரடி வீரர் டோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க அற்புதமான வெற்றியை இறுதி பந்தில் பெற்றுக்கொண்டது.
இறுதி 6 ஓவர்களில் 76 ஓட்டங்கள் தேவைப்பட்டது, அதன்பின்னர் இறுதி 2 ஓவர்களில் 30 ஓட்டங்கள் தேவையான நிலையில் புவனேஷ்வர் குமாரின் அந்த ஓவரில் 19 ஓட்டங்களை டோனி விளாச, இறுதி ஓவரில் ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி பந்தில் அழகான பவுண்டரி அடித்து டோனி வெற்றி தேடிக்கொடுத்தார்.
இன்றைய அதிரடி மூலமாக டோனி தன்மீதான விமர்சனங்களை துடைத்தெறிந்துள்ளார். 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காது 61 ஓட்டங்கள் பெற்ற டோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இன்றைய வெற்றி மூலமாக புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தில் இருந்த ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணி 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.


0 comments:
Post a Comment