மாத்தறையில் ஒருவர் வெட்டி கொலை!


மாத்தறையில், கூரிய ஆயுதமொன்றின் மூலம் தந்தையொருவர் தனது மகனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை கொலன்காஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய கண்டம்பிகே தயாசேன என்பவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினைத் தொடர்ந்து கொலைசெய்யப்பட்டவரின் மனைவியாலும் பிள்ளைகளினாலும் மாவரல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவரல பொலிஸாருடன் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேய்யந்தர மேலதிக நீதிபதி பியந்த கொடித்துவக்கு அவர்களின் தலைமையில் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment