அக்கரப்பத்தனையில் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!


அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வழியுறுத்தி அக்கரப்பத்தனை அப்பகிரன்லி தோட்ட தொழிலாளர்கள் பாடசாலை வளாகத்தினுள் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னடுத்தனர்.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3, அக்கரப்பத்தனை அப்பகிரன்லி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 4ல் கல்வி கற்கும் சிறுவனை மலசலகூடத்திற்கு நீரை ஊற்றும்படி அதிபர் பணித்ததால், பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் நீரை எடுக்க சென்ற மாணவன் கிணற்றில் தவறிவிழுந்துள்ளான்.

எனினும் குறித்த மாணவனை சில நிமிடங்களுக்கு பின் அப்பகுதியில் இருந்த சிலர் கண்டு உடனடியாக கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர். இந்நிலையிலேயே அதிபரின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும், பாடசாலையில் இடம்பெறுகின்ற ஒழுங்கீனங்களை சுட்டிக்காட்டியும், மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த நுவரெலியா கல்வித் திணைக்களத்தின் கோட்டம் 3இன் பணிப்பாளர் எம்.ஜெயராமிடம் மக்கள் மேற்படி சம்பவத்தினைத் தெரிவித்த போது, அதிபர் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உத்தரவு அளித்ததை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment