மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இரு இளைஞர்கள் உட்பட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை சங்கரத்தை – சித்தங்கேணி வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதுடன், இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுழிபுரம் பனிப்புலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் ஜஸ்டின் மற்றும் திருநாவுக்கரசு கரன் எனும் 17 வயதான இருவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்று விட்டு மது போதையில் வந்துள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர்கள் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர்.
இதன்போது நால்வரும் படுகாயமடைந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மற்றைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









0 comments:
Post a Comment