புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சிரம்பையடிப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு சொந்தமான கெப் வாகனமும், லொறியொன்றும் ஒன்றுடனொன்று மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. உயிரிழந்தவர், குறித்த கெப் வாகனத்தின் சாரதியான 40 வயதுடைய ராஜா ராசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த, முல்லைத்தீவு மாவட்ட தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரி உட்பட ஐவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திணைக்கள அதிகாரி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவாின் சடலம் பிரதே பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



0 comments:
Post a Comment