ஐபில் தொடரின் 42 போட்டியாக டெல்லி டேயர்டேவில்ஸ் எதிர் குஜராத் லயன்ஸ் அணிகள் நேற்றைய தினம்(04) டெல்லியில் மோதின.
குஜராத் லயன்ஸ் அணியினர் PLAY-OFFசுற்றுக்கான தகுதியை இழந்து விட்டனர். எனினும் அண்மைய போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் டெல்லி அணியின் மேல் கிரிக்கெட் இரசிகர்களின் பார்வை விழுந்துள்ளது.
ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணியினர் மிகச்சிறப்பாக தமது துடுப்பாட்டத்தினை திறம்பட செய்தனர் என்றே கூற வேண்டும். இருபது ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 208 எனும் அதிகூடிய இலக்கினைப் பெற்றனர்.
அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா 43 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் 5 நன்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களையும், டினேஷ் கார்த்திக் 5 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 34 பந்துகளில் 65 ஓட்டங்களைக் குவித்தனர். பந்துவீச்சில் றபடா மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களைப் பெற்றனர். இவ்விருவர்கள் மாத்திரமே ஓவரொன்றுக்கு 7 மற்றும் 7.5௦ எனும் வீதத்தில் ஓட்டங்களை வழங்கினர். மற்றைய பந்து வீச்சாளர்கள் அனைவருமே ஓவரொன்றுக்கு பத்திற்கும் அதிகாமான ஓட்டங்களையே வாரி வாரி வழங்கி இருந்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியினர் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களை 15 பந்துகள் மீதமிருக்க வெற்றியைப் பெற்றனர். போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் இரசனையை அதிகரித்த போட்டியாக இது அமைந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மொத்தமாக 2௦ ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளி வான வேடிக்கைகளைக் காட்டியிருந்தனர். ஏதோ கணினியில் கிரிக்கெட் விளையாடுவதைப் போன்ற ஒரு உணர்வு நிச்சயம் இந்தப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
சம்சன் 31 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களையும், அதனைத் தொடர்ந்து 3ம் இலக்கத்தில் உள்நுழைந்த பாண்ட், 43 பந்துகளில் 97 ஓட்டங்களை 9 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாகப் பெற்றனர். இவ்விருவரும் 143 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்துள்ளனர். குஜராத் அணியின் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவரொன்றுக்கு பத்திற்கும் அதிகாமான ஓட்டங்களையே வாரி வாரி வழங்கி இருந்தனர். இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியினர் வெற்றியினை இலகுவாகப் பெற்றனர்.

0 comments:
Post a Comment