உணவருந்தும் போது விழுங்கிய கேக் துண்டு தொண்டையில் சிக்கிக்கொண்டதால் ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மாத்தறை, தெனியாய என்சல்வத்த பெரிய தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஜெரொம் என்ற சிறுவன் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தினை அடுத்து சிறுவனை தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதும் குறித்த சிறுவன் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment