நடப்பு சாம்பியன்கள் சன் ரைசேர்ஸ் அணிக்கு சொந்த மண்ணில் சோதனை. மீண்டும் புனே அணி அசத்தல் வெற்றி!


போட்டியில் முதலில் ஆடிய ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கு, அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 39 ஓட்டங்கள்,டோனி 2 சிக்ஸர்கள் அடங்கலாக 31 ஓட்டங்கள், ஸ்மித் 34 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்கள் பெற்றது.

பந்துவீச்சில் சித்தார்த் கவுல் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் , ஆயினும் புவனேஷ்வர் குமாருக்கு விக்கெட்டுக்கள் கிடைக்கவில்லை.

பதிலுக்கு 149 எனும் இலக்குடன் களம் புகுந்த சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி , 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்கள் பெற்று தோல்வியை தழுவியது.

வோர்னர் மற்றும் யுவ்ராஜ் ஆகியோருக்கிடையில் 3 விக்கெட்டில் பெறுமதியான 54 ஓட்டங்கள் பகிரப்பட்டது, வோர்னர் 40 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து செல்ல, அதிரடியாக ஆடிய யுவ்ராஜ் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தாலும் மற்றைய வீரர்கள் யாரும் சரியான பங்களிப்பை வழங்காத நிலையில், சொந்த மண்ணில் சோதனையை சந்தித்தது நடப்பு சம்ம்பியன்களான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி.

பந்துவீச்சில் ஜெயதேவ் உனட்கட் 5 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இன்றைய வெற்றிமூலமாக பூனே அணி 12 வது போட்டியில் 8 வது வெற்றியையும், சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி 12 வது போட்டியில் 5 வது தோல்வியையும் பெற்றுக்கொண்டன.

இன்றைய போட்டியில் ஹட் ட்ரிக் சாதனை நிகழ்த்திய ஜெயதேவ் உனட்கட் ஆட்ட நாயகன் விருதை பெற்றுக்கொண்டார்.

ஸ்மித் தலைமையிலான பூனே அணி இறுதியாக விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 வது IPL போட்டி தொடரின் நேற்று(06) 4 மணிக்கு இடம்பெற்ற போட்டியில் ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் மற்றும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியிட்டன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment