லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரி தோட்ட பிரதேசத்தில் உருக்குலைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தும் ஆற்றில் நேற்று (சனிக்கிழமை) காலை சடலம் ஒன்று மிதப்பதை தமது தொழிலுக்காக அப்பகுதியூடாகச் செல்லும் வேளையில் மக்கள் கண்டுள்ளனர்.
இதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். குறித்த சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



0 comments:
Post a Comment