பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் 92ஆவது அமர்வு இன்று(09) நடைபெறுகின்ற நிலையில், இப் போராட்டம் நடைபெறுகிறது. மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள வந்த வடக்கு மாகாண முதலமைச்சர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.




0 comments:
Post a Comment