வடக்கு முதல்வரை சபைக்குச் செல்லவிடாமல் தடுத்து பட்டதாரிகள் போராட்டம்!

இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சபை அமர்வில் கலந்துகொள்ளவிடால் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடத்தியதால், வடக்கு முதல்வர் திரும்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.

தமது நியமனங்களை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கடந்த 72 நாட்களாக வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமது தீர்வை வழங்குமாறு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபை வாயிலை மூடியும், வடக்கு முதல்வர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரின் காரியாலயங்களை முற்றுகையிட்டும் இப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

பட்டதாரிகளுடன் முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துரையாடியபோதும், தமக்கு உறுதிமொழி வழங்காவிட்டால் சபைக்குள் அனுமதிக்க மாட்டோம் என பட்டதாரிகள் கூறியுள்ள நிலையில் முதல்வர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

முதல்வரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கு முதல்வரை சபைக்குள் அனுமதிக்காமையானது சிறப்புரிமை மீறல் என தெரிவித்து, தற்போது சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment