சட்டவிரோதமாக கடத்தப்பட்ட முதிரைக்குற்றிகள் மீட்பு!


பார ஊர்த்தியில் மறைத்து கடத்தப்பட்ட முதிரை குற்றிகள் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

ஈச்சங்குளம் காட்டுப்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட்ட நிலையில் 25 முதிரைக் குற்றிகள் இன்று (வியாழக்கிழமை)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மரக்குற்றிகள் பார ஊர்த்தியில் எருவிற்குள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பார ஊர்த்தியிலிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment