சொந்த மண்ணிலும் சோகம் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு!


10 வது IPL போட்டி தொடரின் நேற்று(05) இடம்பெற்ற போட்டியில் கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப்
அணிகள் போட்டியிட்டன.

போட்டியில் முதலில் ஆடிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்கள் பெற்றது.

அணித்தலைவர் மக்ஸ்வெல் 6 ஓட்டங்களையும், மன்னன் வோரா 25 ஓட்டங்களையும்,சஹா 21 ,அக்சர் பட்டேல் 17 பந்துகளில் ஆட்டம் இழக்காது 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு 139 எனும் இலகு இலக்குடன் களம் புகுந்த கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்கள் பெற்று தோல்வியடைந்தது.

கோஹ்லி 6 ஓட்டங்களையும்,டி வில்லியர்ஸ் 10 ஓட்டங்களையும்,கெயில் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ,மந்தீப் சிங் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அக்சர் பட்டேல், சந்திப் சர்மா ஆகியோர் 3 விக்கெட்டுக்களையும்,மோஹித் சர்மா , மக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இன்றைய வெற்றி மூலமாக பஞ்சாப் அணி 10 வது போட்டியில் 5 வது வெற்றியையும், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் 12 போட்டியில் 2 வது தோல்வியையும் பெற்றுக்கொண்டன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment