முச்சக்கரவண்டியுடன் மோதிய லொறி : மூவர் படுகாயம்!


திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று(06) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருக்குமே படுங்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment