IPL ஏலத்தில் எதற்காக 14.5 கோடி கொடுக்கப்பட்டதென்பதை அதிரடியில் காட்டினார் பென் ஸ்டோக்ஸ்.பூனே அணி அபார வெற்றி!


10 வது IPL போட்டி தொடரின் நேற்று(01) இடம்பெற்ற போட்டியில் ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் மற்றும் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் போட்டியிட்டன.

போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணிக்கு, அந்த அணியின் ஆரம்ப வீரர்களான இஷான் கிஷான், மக்கலம் ஆகியோர் அதிரடியாக ஆரம்பம் கொடுத்தனர்.இருவரும் முதல் விக்கெட்டில் 6 ஓவர்களில் 55 ஓட்டங்கள் பகிர்ந்தனர்.குஜராத் லயன்ஸ் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்கள் பெற்றது.

மக்கலம் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 27 பந்துகளில் 45 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 31 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 162 எனும் இலக்குடன் களம் புகுந்த ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ், 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்கள் பெற்று வெற்றிபெற்றது.

முதல் 3 விக்கெட்டுக்களும் 10 ஓட்டங்களில் வீழ்த்தப்பட்டது .ரஹானே, திருப்பதி, ஸ்மித்,மனோஜ் திவாரி என்னு முதல் 4 வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் நடையைக் கட்டினாலும் பென் ஸ்டோக்ஸ் தனித்து நின்று போராடி வெற்றிதேடிக் கொடுத்தார்.

பென் ஸ்டோக்ஸ் மற்றும் டோனி ஆகியோருக்கிடையில் 5 விக்கெட்டில் பெறுமதியான 76 ஓட்டங்கள் பகிரப்பட்டது, டோனி 26 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து செல்ல, அதிரடியில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காது 103 ஓட்டங்கள் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தாண்டுக்கான IPL ஏலத்தில் 14.5 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தனக்கான ஏலத்தொகை ஏன் இவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை இன்றைய அதிரடியில் காட்டினார் எனலாம்.

பந்துவீச்சில் போல் சங்கவான், பாசில் தம்பி ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இன்றைய வெற்றிமூலமாக பூனே அணி 10 வது போட்டியில் 6 வந்து வெற்றியையும் ,குஜராத் அணி 10 வது போட்டியில் 7 வது தோல்வியையும் பெற்றுக்கொண்டன.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment