சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து! (PHOTO, VIDEO)

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் அதிவேக ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக ரயில் சங்கத்தானை ரயில் நிலையத்தை கடந்து பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment