கினிகத்தேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரகாமுள்ள பகுதியில் வர்த்தக நிலையக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சீரற்ற காநிலை தொடர்ந்தும் நிலவுவதால் பேரகாமுள்ள பகுதியில் மண்சரிவுகள் ஏற்படும் அச்சம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனர்த்தத்தினால் வர்த்தகத் தொகுதிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பேரகாமுல்லையில் நிலம் தாழிறங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்பகமுவ பிரதேச இடர் முகாமைத்துவப் பிரிவினரும் குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.





0 comments:
Post a Comment