பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (புதன்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கறுப்புக் கொடி கட்டி, பந்தல் அமைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் எனவும் பல்கலைக்கழக வளாகத்தில் இணைக்கப்பட்டுள்ள சி.சி.ரீ.வி. கெமெராக்கள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, பல்கலைக்கழக விடுதி பகுதியில் இருந்து பிரதான வீதி வரை சென்று போராட்டத்தை நடத்தியுள்ளனர்.










0 comments:
Post a Comment