நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்!


திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

1945-ம் ஆண்டு மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்.

தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வினுசக்கரவர்த்தி நடித்துள்ளார்.

இவர், 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். கடைசியாக 2014-ம் ஆண்டு வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment